• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர்

June 9, 2018 தண்டோரா குழு

மும்பையில் கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடும் வெயில் விசி வந்த நிலையில் பருவமழைக்கு முன்பான கனமழை வருகிறது. இதனால் சாலையெங்கும் வெல்ல காட்சியானது. நேற்று இரவு பெய்த கனமழையால் கண்டிவ்லி அகுர்லி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நிண்ட வருசையில் நின்ற படிய நரகத் தொடங்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த நந்த்குமார் இங்லே(47) கொட்டும் மழையிலும் விடாமல் போக்குவரத்தை சரி செய்து வந்துள்ளார்.மேலும் அவர் பணியில் இருந்த போது பலத்த காற்று வீசியதால் சாலையில் இருந்த தடுப்புகள் காற்றுக்கு நகர்த்தி சென்றது. உடனே அவற்றையும் சரிசெய்து விட்டு போக்குவரத்தை சரிசெய்யத் தொடங்கினார்.

நந்த்குமார் இங்லே எந்த கவசமும் குடையும் இல்லாமல் கொட்டும் மழையில் தனது கடமையில் இருந்து தவறாமல் இரவு 11.30மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியுள்ளர். அகுர்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் தனது போன், பர்ஸ் ஆகியவற்றை மற்றொரு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு தனது இடத்தை விட்டு நகராமல் வேலை பார்த்துள்ளார்.மும்பை காவல்துறையில் கடந்த 23 ஆண்டுகளாக, நந்த்குமார் இங்லே பணியாற்றி வருகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க