• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி – 3 மின்வாரிய அதிகாரிகள் நீக்கம்

November 1, 2017 தண்டோரா குழு

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் 3 மின்வாரிய அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால்,சென்னை கொடுங்கையூரில் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ மற்றொரு சிறுமி மூவரும் வெளியே தெருவில் விளையாடச்சென்றனர். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் வீட்டருகில் மின் இணைப்பு பெட்டி இருக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர்.

மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் மூன்றாவதாக பின்னால் வந்த மாணவி பின் வாங்கியதால் மின்சாரம் பாயாமல் தப்பித்தார்.

மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட இரண்டு சிறுமிகளையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் சிறுமிகள் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாகவே மின் இணைப்பு பெட்டியிலிருந்த மின்சார ஒயர் தண்ணீரில் விழுந்துள்ளது. இதனால் அதில் கால் வைத்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சற்று பின்னால் வந்ததால் மூன்றாவது சிறுமி உயிர் பிழைத்தார். போராட்டம் நடத்திய பொதுமக்களை கொடுங்கையூர் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் வியாசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு மின்துறை சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை வெள்ளத்தால் உயிரிழப்புகள் 4 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று கொடுங்கையூரில் இரண்டு பள்ளிச் சிறுமிகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க