• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

January 3, 2022 தண்டோரா குழு

கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் மீண்டும் படுக்கைகள் அமைத்து வார்டு ஏற்பாடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சென்று ஆய்வு ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோன்று கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு வாய்ந்த அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க