April 8, 2021
தண்டோரா குழு
கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:
கடந்த முறை கொடிசியா வளாகம் கொரோனா சிகிச்சை மையத்திற்காக கொடுக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைவே மீண்டும் கொடிசியா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தற்போது 2 வது கொரோனா அலை மீண்டும் பரவல துவங்கியுள்ளது. இதனால் கொடிசியா வளாகம் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படுகிறது.
அதனால் மீண்டும் கொரோனா சிகிச்சை மையத்திற்காக கொடிசியா டி ஹால் வளாகம் சுகாதாரத்துறையினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு உள்ள பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனே எங்களது நோக்கம்.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு நடமுறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்