• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொசு உற்பத்தி :தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

December 2, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்தில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்ததாக, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபோல் சுன்கராவின் உத்தரவுப்படி, மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமென்ட் மற்றும் நெகிழிப் பொருள்களை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்பதால் நல்ல நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருள்களான டப்பாக்கள், பூச்செடிகள், பெயின்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 42ஆவது வார்டு, அத்திப்பாளையம் சாலை, ஐயப்பா நகர், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க