• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்குநாடு கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு சுழற்கோப்பைகள் சான்றிதழ்கள்

May 27, 2022 தண்டோரா குழு

கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் இந்திய அரசின் நிதி ஆயோக்கின் துணை ஆலோசகர் முனைவர் எஸ்.பி. முனிராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர்

கலை , வரலாறு , பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிற கல்லூரியாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி திகழ்வதாகவும், தென்னிந்தியாவின் சிறந்த தொழில் நகரமான கோவையில் தலைசிறந்த அறிவு நிலையமாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விளங்குவதாக புகழாரம் சூட்டினார்.

மேலும் , இவ்வுலகம் மிகப்பெரியது என்றும் மாணவ , மாணவியர் சொந்த மாவட்டத்துக்கு உள்ளேயே தங்களின் அறிவையும் திறமையையும் முடக்கிக் கொள்ளாக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.தொடர்ந்து இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் லச்சுமணசாமி ஆண்டறிக்கையை வாசித்தார். முன்னதாகக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் சிவசக்தி வரவேற்புரையாற்றினார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல் முதல்வராகவும் நீண்டகாலச் செயலராகவும் மேலாண்மைக்குழுவின் தலைவராகவும் இருந்த முனைவர் ஆறுச்சாமி சாதனைகளை விளக்கும் பாடல் இடம்பெற்ற குறுந்தகட்டைச் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.

தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், சிறந்த துறை , சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது. முடிவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க