• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கை குழந்தையை வகுப்பிற்கு அழைத்துவர ஆசிரியர் அனுமதி

July 3, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லாத காரணத்தால், கல்லூரிக்கு செல்ல முடியாத தாய்க்கு, குழந்தையை கல்லூரிக்கு கொண்டு வர கல்லூரி ஆசிரியர் அனுமதி வழங்கிய சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் டென்னீஸ் சீ நகரை சேர்ந்தவர் மோர்கன் கிங் என்னும் 21 வயது பெண், டென்னீஸ் சீ பல்கலைக்கழகத்தில் குழந்தை மற்றும் குடும்ப ஆய்வுகள் துறையில் படித்து வருகிறார். அவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. படிக்க செல்வதால் தனது குழந்தையை அவருடைய தாத்தா மற்றும் பாட்டி பார்த்துக்கொண்டு வந்தனர்.

மோர்கன் கிங்கின் தாத்தா மற்றும் பாட்டி வெளியூருக்கு சென்றதால், மோர்க்கனால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. தன்னுடைய நிலை குறித்து அவருடைய வகுப்பு ஆசிரியர் சாலி ஹன்டருக்கு இ-மெயில் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

“குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால், உன்னால் கல்லூரிக்கு வர முடியவில்லை என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், உன் குழந்தையை அழைத்துக்கொண்டு, நீ கல்லூரிக்கு வரலாம். நீ பாடத்தை படித்துக்கொண்டு, பாடத்தின் குறிப்பேடுகளை எழுதுவதால், உன்னால் குழந்தையை வைத்துக்கொண்டு அதை செய்யமுடியாது. அதனால், பாடம் நடத்தும்போது, உன் மகளை நான் என் கையில் வைத்துக்கொள்கிறேன். இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை, உண்மையாக சொல்கிறேன். என்று சாலி பதில் எழுதியிருந்தார்.

இந்த இ-மெயில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதை கண்ட மக்கள் சாலியை மனதார வாழ்த்தியுள்ளனர்.

மேலும் படிக்க