• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.பி.ஆர் . கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற” ஃபீஸ்ட்டா’23

February 20, 2023 தண்டோரா குழு

கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் சார்பாக ” ஃபீஸ்ட்டா’23 “என்ற தொழில்நுட்ப போட்டிகளும் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில் 100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள், 50 க்கும் மேற்பட்ட கருத்துப்பட்டறைகள், வேடிக்கை நிகழ்ச்சிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அரங்குகள்,பைக் சாகச நிகழ்ச்சிகள், வாகன கண்காட்சிகள், ஹேக்கத்தான், கல்லூரியின் அனைத்து துறைகளின் சார்பாக துறைசார்ந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், ப்ராஜெக்ட் எக்ஸ்போ, பிரைன் டீசர்ஸ்,பிரிட்ஜ் பில்டிங், ஐடியாதான்,வினாடி வினா ஆகிய தொழில்நுட்ப போட்டிகளும்,டிராமா,மியூசிக்மைம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .

கலை விழாவில் திரை பிரபலங்கள் அர்ஜுன்தாஸ்,ஜோ படக்குழுவின் ரியோ ராஜ் , மாளவிகா பாவியா, ஜூவின் ஜோனிக்ஸ், டி ஜே பாப்,ஜோயல்,லிபின்சன் சர்ச்சில்,மார்செல்,டி ஜே ப்ளாக், ஸ்ரீநிதி வினைதா,”குதூகலம் ” படத்தின் நடிகர் புகழ், பாலமுருகன் , ” ஊர்குருவி பருந்தாகும் ” பட குழுவினர்களான ரஞ்சித் உன்னி, கோடாங்கி வடிவேலு, காயத்ரி ஐயர், விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த விளக்க அரங்குகள்:

உலகின் வறுமையை ஒழிக்கவும் நமது பூமியை காக்கவும், ” நிலையான வளர்ச்சி இலக்குகள் ” ஐநா சபையால் 2015 ஆம் ஆண்டு 17 இலக்குகள் வகுக்கப்பட்டன.அவை பசி, வறுமை ஒழிப்பு, உடல்நலம், தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர், சுகாதாரம், மலிவான தூய எரிசக்தி, தரமான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் புத்தாக்கம், உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது கே.பி.ஆர் . கல்லூரியில் நடைபெற்ற இந்த உலகின் நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளையும் விளக்கும்படி அமைக்கப்பட்ட அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கே.பி.ஆர் . பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளின் சார்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் 5 – இலட்சம் ருபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிற கல்லூரி மாணவர்கள் உட்பட 8000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

மேலும் படிக்க