• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.பி.ஆர் அகாடமியில் பயிற்சி பெற்ற 21 மாணவர்கள் ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் வெற்றி

July 13, 2019 தண்டோரா குழு

கோவை கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரில் 21 பேர் ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசுப் பணியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர்ப் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் இந்த வருடத்திற்கான 896 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வானது முதல் நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 தேர்வுகளை உள்ளடக்கியது. 1௦ லட்சத்திற்கும் அதிகமானோர் முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு அகில இந்திய அளவில் நடைபெற்றது. இதில் கோவை மாநகரிலிருந்து 8,879 பேர் விண்ணப்பித்ததில் 4,508 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இத்தேர்விற்கான முடிவு நேற்று மத்திய பணியாளர் தேர்வனணயத்தால் அறிவிக்கப்பட்டது.அதில் நாடு முழுவதிலும் இருந்து 11,845 பேர் முதன்மை தேர்வு எழுத தேர்வு தேர்ச்சி பெற்றனர். இதில், கோவை கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரில் கார்த்திகேயன், பிரபினா, நாராயண சர்மா அமல அட்வின், ரியாஸ், கவிப்பிரகாஷ் உள்ளிட்ட 21 பேர் ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 2௦ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் நிலையான திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் படிக்க