January 27, 2021
தண்டோரா குழு
கோவை கே.ஜி மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.
கோவையில் கடந்த 47 வருடங்களாக மருத்துவ சேவையில் தனக்கென தனி முத்திரை பதித்து மருத்துவ சேவை வழங்கி வருகிறது கே.ஜி. மருத்துவமனை.கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் கே.ஜி.மருத்துமனைக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக, 24 மணி நேரமும் செயல்படும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய விபத்து ,அவசர சிகிச்சைபிரிவுக்கென பிரத்யேக மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் ,கேஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் , மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் அசோக் பக்தவத்சலம் , மேனேஜிங்டிரஸ்டி , துணை தலைவர் வசந்தி ரகு , ஆகியோர் கொண்டனர். இந்த பிரத்யேக அவசர சிகிச்சை மையத்தில் ஒரே நேரத்தில் ஏழு பேருக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் செயல்பட உள்ள இந்த பிரிவில் , விபத்து சிகிச்சை , தலைக்காயம் , எலும்பு முறிவு , இருதய சிகிச்சை , மூளை மற்றும் நரம்பு சிகிச்சை , சிறுநீரக சிகிச்சை ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவக்குழுவினர்களான , செல்வக்குமார் , பேபி கவிதா , ஜெயஷகிலா , அமிர்தலிங்கம் , மணிமொழி செல்வன் , கார்த்திகேயன் , அருண் தருமன் , சேனா குரியன் , கலைமணி , மற்றும் அவசர சிகிச்சை தொழில் நுட்ப வல்லுநர்களான கிருஷ்ணகுமார் , செந்தில் குமார் , ஆகியோருடன் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.