December 5, 2021
தண்டோரா குழு
கோவை கே.ஜி. மருத்துவமனையில்அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸ் துவங்கப்பட்டது.
பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை என்பது முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு துறையாக உள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்பு, நெஞ்சு வலி , சாலை விபத்து,எலும்பு முறிவு,மூச்சுத்திணறல் போன்ற அவசர கால மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில்,ஒவ்வொரு பல்நோக்கு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
அதே நேரத்தில் இது குறித்து முறையான சிகிச்சை அளிக்கும் விதமாக ,கடந்த 47 வருடங்களாக சிறந்த சேவை வழங்கி வரும், கே ஜி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான அவசர சிகிச்சை பிரிவு முதுகலை பட்டபிரிவு கோர்ஸ் துவங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் மற்றும் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸை துவக்கி வைத்தார்.