• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

June 27, 2019 தண்டோரா குழு

கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமாக வெண்பன்றி வளர்ப்பு கூடம் உள்ளது. இதில் வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விடுவது வழக்கம். இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை இடையர்பாளையம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த ராசப்பன், வேடியப்பன் மற்றும் அவரது உறவினர் மற்றொரு வேடியப்பன் ஆகிய மூன்று பேர் இன்று வரவழைக்கப்பட்டனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் ராசப்ப்பன் உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே இறங்கியதும் ராசப்பன் மயக்கமுற்ற நிலையில் அவரை காப்பாற்ற வேடியப்பன் மற்றொரு வேடியப்பன் இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். இதில் 3 பேரும் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க