March 5, 2020
தண்டோரா குழு
கார் விற்பனையை மறுவரையறை செய்யும் விதமாக வாங்கும் புது அனுபவத்தை பெற வைக்கும் எம்ஜி மோட்டார்ஸ், கோவை சின்னியம்பாளையத்தில் புதிய கிளையை துவக்கியது. தமிழ்நாட்டில் இந்த கிளையோடு சேர்த்து தற்போது 5 விற்பனை மையங்களையும் மாநில அளவில் இன்னும் 8 மையங்களை வரும் 2021 இறுதிக்குள் திறக்கவும் முடிவு செய்துள்ளது.
கோவையில் பிரீமியம் பந்தய பயன்பாட்டுக் கார் (SUV) தேவையை உணர்ந்து, சந்தைப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் காலத்து பழமையை நினைவூட்டி, புதிய அனுபவத்தை பெறும் வகையில் 4380 சதுரடியில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 12,045 சதுரடியில் அதிநவீன சேவை வசதிகளையும் அமைத்துள்ளது. புதிய துவக்க விழாவுடன், நாடு முழுவதும் தற்போது 206 விற்பனை மையங்களை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 250 மையங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார்ஸ், புதுமையான கண்டுபிடிப்புகளுடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட கார் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. கோவை விற்பனை மையம், இந்த நோக்கத்தின் மதிப்பை நிறைவேற்றும்.
துவக்க விழாவில், எம்ஜி மோட்டார் இன்டியாவின் தலைமை வணிக அதிகாரி கவ்ரவ் குப்தா பேசுகையில்,
எங்களது விரிவாக்க நடவடிக்கையாக மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் சில்லறை விற்பனையகம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது. கோவை நகரத்தில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையிலும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், இது உதவும். அதிநவீன வசதியாக ‘ஆட்டோமோட்டிவ் ரீடைல் 2.0’ விகிதத்தில், புதிய டிஜிட்டல் கருவிகளுடன், புதிய அனுபவத்தில் மூழ்கடிக்கும் விதமாக கண்டுபிடிப்புகளுடன் இவை உள்ளன. இது கோவை வாடிக்கையாளர்களுக்கு புதுமையானாதாக இருக்கும். கோவையும், தமிழ்நாடும் எங்களுக்கு மிக முக்கியம் என்பதால், வரும் 2021ம் ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 விற்பனை, சேவை மையத்தை துவக்குவோம் என்றார்.