• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்துார் மராத்தான் 2022ம் ஆண்டின் பத்தாவது பதிப்பிற்கான துவக்க விழா

December 6, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் நகரை மீண்டுமொரு முறை கோலாகலமாக்க வருகிறது வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பத்தாவதுஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க 16,500+க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் இந்த மாரத்தானின் அதிகாரபூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இன்று வெளியிட்டனர்.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (சிசிஎஃப்), கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மாரத்தானை நடத்துகிறது. கடந்த ஆண்டுகளில் மாரத்தான் வாயிலாக கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.

இந்த மாரத்தான் போட்டியனது தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் 21.1 கிமீ ஓட்டம் (அரை மாரத்தான்), 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம்/நடை ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்காக ரூபாய் 2.5 (இரண்டரை) லட்சத்துக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வு பற்றி வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்,வி கே சி மேலாண்மை இயக்குனர் நவ்ஷத் கூறுகையில்,

“கோயம்புத்தூர் மாரத்தானின் 10 வது பதிப்பை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷனுடன் இணைந்து நடத்தவதில் பெருமையடைகிறோம். இந்த ஆண்டு 16000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
நாங்கள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தினசரி நடைப்பயிற்சி மற்றும் ஓட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எப்போதும் முயன்று வருகிறோம் என்றார்.

இந்தநிகழ்ச்சியில், சிசிஎஃப் நிர்வாக அறங்காவலர் டாக்டர். பாலாஜி பேசுகையில்,

“நமது கோயம்புத்தூர் மாரத்தானின் 10வது பதிப்பிற்கு கோவையின் வரவேற்பை கண்டு நாங்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறோம். இந்தப் பதிப்பு உண்மையிலேயே எங்கள் உற்சாகத்தைஇரட்டிப்பாக்குகிறது. எங்களுக்குஆதரவளித்து வந்த நிறுவனங்கள் மீண்டும் வந்துள்ளனர். மேலும் சில புதிய நிறுவனங்கள் எங்கள் நோக்கத்தை ஆதரிக்க முன் வந்துள்ளனர்.ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் புதிய இலக்குகளுடன் களமிறங்க, இந்தநிகழ்வு ஒரு புதிய அனுபவமாகவும், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய வலிமை தருவதாகவும் அமையும்என நம்புகிறோம் என்றார்.

பந்தய இயக்குனர், தரமேஷ் பொன்னுசாமி பேசுகையில்,

வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான், “கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் நிகழ்வாக நடந்த மாரத்தானை இம்முறை களநிகழ்வாக நடத்தி, கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷனுக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சியை தருகிறது. “ஓட போலாமா” என்ற விளம்பரவாசகத்துடன் வளிவந்த எங்கள் பதிவுக்கான அழைப்பிற்கு கோவை மக்களும், நாடெங்கும் உள்ள ரன்னர்களும் பெரும் வரவேற்பை அளித்தனர். எங்களுக்கு பேராதரவு அளித்து வரும் கோயம்புத்தூர் நகர காவல்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், இன்னும் பிற நிறுவனங்களுக்கு எங்கள் நன்றி என்றார்.

மேலும் படிக்க