August 17, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்ந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா மோசமான வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. இதனால் 80 அணைகள் திறக்கபட்டுள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் சுமார் 1500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.