February 26, 2018
தண்டோரா குழு
கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் என கோவை எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிறுவாணி அணைகட்டு பகுதியில் இருந்து சராசரியாக 101 mlt குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணைகட்டு பகுதியில் கேரளா அரசு அதிகப்படியான குடிநீரை தற்போது திறந்து விட்டு உள்ளனர். ஏற்கெனவே பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகளை கேரள அரசு அணைகட்டி உள்ளதால் , குடிநீர் விநியோகம் குறைந்து உள்ளது. தமிழக அரசு , கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும். சிறுவாணி அணைகட்டு பகுதியில் , பழங்குடியின மக்களுக்காகவும், வன விலங்குகளுக்காகவும் திறந்து விடக்கூடிய தண்ணீர் அளவு அதிகப்படியான அளவு திறந்து விடப்படுகிறதா அல்லது சராசரி அளவு திறக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோவையில் உள்ள அனைத்து கட்சியினரை சேர்ந்தவர்கள் சிறுவாணி அணைக்கட்டு பகுதிக்கு சென்று இது தொடர்பாக பார்வையிட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.