• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது !

November 11, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒருவர் கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சபரி என்பதும் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க