• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம் ; பயணிகள் கடும் அவதி

April 6, 2017 தண்டோரா குழு

கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜிஷ்ணு பினராய் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி , கேரளா மாநிலம் டி.ஜி.பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கேரளா முழுவதும் எதிர் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

இதனால் கோவை உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும், பேருந்துகள் கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக கேரளாவிற்கு செல்ல இருந்த பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தீடீரென முழு அடைப்பு நடைபெற்றதால், இது குறித்து அறியாத பொதுமக்கள் பலரும் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். பொதுமக்கள் அவதிக்குள்ளாவதை தடுக்க கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க