December 25, 2020
தண்டோரா குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஆர்யா ராஜேந்திரன் இளம் வயதில் (21) மேயரான முதல் நபர் என்ற சாதனையை படைத்தார்.
கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில்,முடவன்முகள் வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு
ஆர்யா ராஜேந்திரனை தேர்வு செய்தது.
இதை மாநிலக் கமிட்டி ஏற்று, இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றால், இந்திய வரலாற்றிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெயரைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.