• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

August 17, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிரைமாத கர்ப்பிணியான சஜிதா ஜாபீல்(25)என்பவர் மழை வெள்ளத்தில் தவித்து வந்துள்ளார்.அவரை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கேரளா முழுவதும் வெள்ளத்தால் மக்கள் துயரப்பட்டு வரும் நிலையில், தான் தாய்மை நிலையினை அடைந்திருப்பது மறக்கமுடியாத நிகழ்வாக கருதுவதாக சஜிதா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க