• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; – கோவையில் பயணிகள் அவதி

December 17, 2019

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெருவதால் கோவையில் பொதுமக்கள் அவதி பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்ல வந்த பயனிகள் பேருந்து இயக்கப்படாததால் சிரமத்திற்க்கு ஆளானார்கள்.

(சிஏபி) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடுமுழுவதும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டோம், என அறிவித்தார். இதை தொடர்ந்து கேரளாவில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்சும் ஒரேமேடையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதனைதொடர்ந்து கேரளா முழுவதும் அனைத்துக்கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை அடுத்து. கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் வழிதட பேருந்து நிலையம் இன்று ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், முழு அடைப்பு போராட்டம் நடைபெருவது அறியாத சிலர் பேருந்து நிலையம் வரைவந்து, கேரளா செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன் காத்திருந்தது பரிதாபமாக உள்ளது. மேலும் வேறுவழி இன்றி மக்கள் திரும்பி செல்வதை காணமுடிந்தது.

மேலும் படிக்க