• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

May 20, 2017 தண்டோரா குழு

கேரளாவில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள பெடாவில் சட்டம்பி சுவாமி ஆசிரமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ஹரிஸ்வாமி. இவர் 23 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.அப்போது அந்த பெண் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கத்தியை எடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டியிருக்கிறார்.இதனால் படுகாயமடைந்த அந்த சாமியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சட்டம்பி ஸ்வாமி ஆசிரம நிர்வாகிகள் கூறும்போது,

ஹரிஸ்வாமி 15 வருடத்திற்கு முன் பிரம்மச்சாரியாக இங்கு இருந்தார். அதன் பிறகு சில காரணங்களால் அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி விட்டார். தற்போது அவருக்கும் இந்த ஆசிரமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது பிரபலத்திற்காக இந்த ஆசிரமத்தின் பெயரை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நோயின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் அம்மாதான் குடும்பக் கஷ்டம் போக வேண்டும் என்பதற்காக ஹரிஸ்வாமியை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து பூஜை செய்யச் சொல்லி இருக்கிறார்.

இந்த சந்தர்ப்ங்களை பயன்படுத்திய சாமியார் அந்தப் பெண்ணிடம் அத்து மீறியிருக்கிறார்.
மேலும்,அப்பெண் தான் 12ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து சாமியார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சாமியார் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குற்றம் செய்யத் தூண்டியதாக அந்தப் பெண்ணின் அம்மா மீதும் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சாமியாருக்கு காயம் பட்ட இடத்தில் ரத்தப் போக்கை நிறுத்தவும் சிறுநீர்ப் பாதையை சரி செய்யவும் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கடினமாக இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.அபெண்ணிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரவித்துள்ளார்.

மேலும் படிக்க