July 23, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தமிழக லாரி மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் கோவை அன்னூரை சேர்ந்த லாரி கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்த போராட்டதில் ஈடுபட்டு வருக்கின்றனர்.இந்நிலையில்,கோவை அடுத்த மேட்டுபாளையத்தில் இருந்து நிஜாம் என்பருக்கு சொந்தமான லாரியில் காய்கறிகள் ஏற்றி கேரள மாநில சங்கனாசேரி கொண்டு செல்ல,நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்டுள்ளனர்.இதில் லாரி ஓட்டுனர் நூருல்லா மற்றும் கிளீனர் விஜய் என்ற முபாரக் பாட்சா சென்றுள்ளனர்.
அப்போது வாலையாறு சோதனை சாவடியை கடந்து வாலையாறு அடுத்த கஞ்சிக்கோடு அருகே மர்ம நபர்கள் சிலர் லாரியின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் காயமடைந்த லாரி கிளீனர் முபாரக் பாட்சா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் நூருல்லா காயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் நூருல்லா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளார்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டதில் ஈடுபட்டு வரும் நிலையில்,லாரி இயக்கப்பட்டதால் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக கேரள லாரி உரிமையாளர்கள் இந்த சம்பவதிற்கு தொடர்பு இல்லை என விளக்கமளித்துள்ளனர்.எனினும்,கேரளாவில் தமிழக லாரி தாக்கப்பட்டு தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.