• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு, ஊருக்குள் புகுந்துள்ளது. இதில், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோட் மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கேரளாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான எண் 183 மழை வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்டயம், சபரிமலை, குமுளி, இடுக்கிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் படிக்க