• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

April 9, 2022 தண்டோரா குழு

கேரளாவால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு சிறுவாணி அணையின் நீர் மட்டம் 24 அடியாக குறைந்தது.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது.இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சிறுவாணி அணையிலிருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது மிகவும் குறைந்துள்ளது. தற்போது சிறுவாணியின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்துள்ளது.

இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 90 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 55 மில்லியன் லிட்டருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 55.47 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் 47.73 எம்.எல்.டி. குடிநீர் கோவை மாநகராட்சிக்கும் மீதியுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுவாணி விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்கள் இடைவெளி அதிகமாகியுள்ளது.

இதனை அடுத்து மாநகராட்சி சார்பாக பில்லூர் குடிநீர் திட்டத்தில் கூடுதல் நீருந்திகள் பயன்படுத்தி கூடுதலாக நீரெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லூர் நீரினை சிறுவாணி பகுதியுடன் பகிர்ந்து பில்லூர் மற்றும் சிறுவாணி விநியோகப் பகுதிகள் இரண்டிலும் ஒரே மாதிரி சீரான இடைவெளியுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க