• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளத்தில் பா.ஜ.க. தொண்டர் கொலை

February 13, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர் நிர்மல் (2௦) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருசூர் மாவட்டத்தில் உள்ள முக்கட்டுகரா என்னும் இடத்தில் அக்கட்சியின் தொண்டர் நிர்மல் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியினர் திருசூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்பு வேலைநிறுத்தம் நடத்தினர்.

பாஜக மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்வதாக அக்கட்சி புகார் கூறியுள்ளது.

“2௦17ம் ஆண்டு, ஜனவரி மாதம் தல்லாசேரி மாவட்டத்திம் தர்மடம் கிராமத்தில் சந்தோஷ் (52) என்ற கட்சித் தொண்டர் வீட்டில் தனியாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியினர் கொலை செய்தனர். அதே நாளில், தள்ளிபரம்பா என்னும் இடத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

கேரள மாநிலத்தில் 57-வது மாநில பள்ளிக் கலை விழா நடைபெற்ற போது, அரசியல் வன்முறைகள் நடந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தது. வாகனங்களும் சாலையில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு அரசியல் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும். என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு நிறுத்த வேண்டும்“

என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க