• Download mobile app
11 Dec 2025, ThursdayEdition - 3592
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கேம்ஃபோர்டிக்ஸ் 2025’: கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் 16வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் கவர்னர்ஸ் ஹவுஸ் அணி சாம்பியன்

December 11, 2025 தண்டோரா குழு

கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி தனது 16வது ஆண்டு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டியை ‘கேம்ஃபோர்டிக்ஸ் 2025’ என்ற பெயரில் கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 6ம் தேதி நடத்தியது.

இந்திய விமானப்படையின் மூத்த வீரரும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற்றவருமான குரூப் கேப்டன் ஜெயசங்கர், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். முன்னதாக சம்பிரதாய வரவேற்பும் அதைத் தொடர்ந்து பள்ளி பாடகர் குழுவினரின் பிரார்த்தனையும் சத்திய பிரமாண நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.கச்சிதமான அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் குரூப் கேப்டன் ஜெயசங்கர்ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து ஒலிம்பிக் லட்சியங்களான சிறப்பம்சம், நட்பு மற்றும் மரியாதை ஆகியவற்றைக் குறிக்கும் வகையிலான கேம்ஃபோர்டிக்ஸ் ஜோதியை பள்ளியின் விளையாட்டுக் குழு தலைவர்கள் ஏந்திச் சென்றனர்.

பின்னர் போட்டிகள் நடைபெற்றன. கேம்போர்டு பள்ளியின் இளம் போட்டியாளர்கள் மன உறுதி, திறமை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர். தடகள போட்டிகளில் அவர்களின் பங்கேற்பு அனைவரையும் கவர்வதாக இருந்தது. பெற்றோர்களும் பொதுமக்களும் கைதட்டி ஆரவாரம் செய்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.
ஃபெதர்ஸ் இன் மோஷன், மேஜிக் மூவ்ஸ், ஃபீனிகல் ஃப்ளைட், பவர் பல்ஸ், ஃப்ளெக்ஸ் டு ஹீல், எலிகன்ஸ் இன் எலிவேஷன், ஃபிரேம்ஸ் ஆஃப் எக்ஸ்பிரஷன் மற்றும் உற்சாகமான ரிதம் ரெஜிமென்ட் போன்ற வண்ணமயமான மற்றும் துடிப்பான நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த போட்டிகளில் கவர்னர்ஸ் ஹவுஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது, அதே நேரத்தில் அட்மிரல்ஸ் ஹவுஸ் பெருமையுடன் மார்ச் பாஸ்ட் டிராபியை வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கேம்போர்டு சர்வதேச பள்ளி சேர்மன் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க