July 9, 2021
தண்டோரா குழு
கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரூட்ஸ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், ரூட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேலாண்மை துறை பொது மேலாளர் சம்பத்குமார் கே பி ஆர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு அகிலா கல்லூரியின் முதன்மை செயலர் முனைவர் நடராஜன் மெக்கானிக்கல் துறை தலைவர் ரமேஷ் பாபு மற்றும் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் சார்பில் முதல்வர் மு அகிலா அவர்களும் மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கே பி ஆர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ரூட்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறவும் மேலும் அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், மேலும் அவர்களின் தேவைகளை கண்டு அதற்கான தீர்வு காண ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
கே பி ஆர் பொறியியல் கல்லூரி ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களுடன் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இது போன்ற தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் தொழில் தொழில்துறையின் தேவையை அறிந்து அதற்கேற்ப மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் மேலும் புதிய பாடத்திட்டங்களை வகுக்க வழிவகுக்கும் என்று கல்லூரியின் முதல்வர் முனைவர் மு அகிலா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.