• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“கேடி பிபில்லா கில்லாடி ரங்கா” படத்தை போன்று மகனுக்கு அரசு வேலை கிடைக்க தந்தை தற்கொலை

March 25, 2017 தண்டோரா குழு

மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியை சேர்ந்தவர் மகாலிங்கம்(52). காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இம்மாதம் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அலுவலகத்திற்கு 9 மணிக்கு சென்றுள்ளார். அப்போது பணியிலிருந்த காவலரை, காலை நேர உணவிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவர் சென்ற பின், அலுவலக வளாகத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

உணவிற்கு சென்றுவிட்டு மீண்டும் 1௦.15 மணிக்கு அலுவலகம் திரும்பிய காவலர், அவர் மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துஉடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டுமென்று, தன்னுடைய ஓய்விற்கு ஒரு வாரத்திற்கு முன் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சோதனை செய்தபோது, அவருடைய சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் சக ஊழியர் ஒருவர் தன்னை அவதூறாக பேசியதால், அதிக மன உளைச்சலில் இருப்பதாக, தன்னுடைய மரணத்திற்கு அந்த ஊழியரே காரணம் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், “அவருடைய பணி மார்ச் 31ம் முடிகிறது. பணி ஓய்வு விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தது. அவருடைய மகனுக்கு சரியான வேலை இல்லாததை குறித்து கவலையோடிருந்தார். தன்னுடைய மகனுக்கு கருணையின் அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.

அவருடைய மனைவி அமுதவல்லி அளித்த புகாரில், “எங்களுடைய மகனின் எதிர்காலத்தை குறித்து அதிக கவலையோடிருந்தார். என்னுடைய மகனுக்கும் அவருக்குமிடையே எந்த சரியான பேச்சுவார்த்தையும் இல்லை” என்றார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகாலிங்கத்திற்கு மனைவி அமுதவல்லி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் வருவது போன்று தன் மகனுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க