August 15, 2021
தண்டோரா குழு
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் எளிய முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கோவை கேஜி மருத்துவமனை வளாகத்தில் கேஜி மருத்துவமனை தலைவர் கேஜி பக்தவத்சலம் தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் செவிலியர்கள் முன்னிலையில் சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்த ஆண்டு 75வது சுதந்திர தின விழா பவள விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பெருமை மிக்கது என்றும் இந்தியர்கள் அனைவரும் நாட்டிற்காக பாடுபட வேண்டும் என்றும் சோம்பேறித்தனத்தை விட்டு போக்கியும், கேளிக்கை போன்ற விஷயங்களை தவிர்த்தும் அனைத்து விதமான விளையாட்டுகளிலும் ஈடுபட்டு இந்தியாவிற்கு அதிக அளவில் பதக்கங்கள் வென்று தர வேண்டும் என்றார். அரசாங்கம் விளையாட்டிற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை கேஜி மருத்துவமனையில் இருதய பரிசோதனை ரூபாய் 5000 முதல் 7000 வரைலான குறைந்த கட்டணத்தில் பரிசோதனை செய்து கொள்ள சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகையானது ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துகொள்ளும் 200 நபர்களுக்கு மட்டும் இவர்கள் 31.8.2021 வரை தங்களுக்கு விருப்பமான தேதியில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் கேஜி மருத்துவமனை துணைத்தலைவர் வசந்தி ரகு, முதன்மை செயல் அலுவலர் அவந்திகா, இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார், நிர்வாக இயக்குனர் வேலுசாமி, முதன்மை செயல் அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.