August 3, 2021
தண்டோரா குழு
கோவை கேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனை 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் அவசர சிகிச்சை பிரிவு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்க நிறுவனத்தின் தொழில் நுட்பத்துடன் 2 இருதய அறுவை சிகிச்சை அரங்கத்தை கேஜி மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் முன்னிலையில் டாக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.
இது குறித்து கேஜி மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் கூறுகையில்,
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய
2 இருதய அறுவை சிகிச்சை அரங்கம் இன்று கேஜி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள
இந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில்
சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் எல்லா விதமான நவீன உபகரணங்கள் உள்ளன என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.