• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி

March 24, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 18 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரையை சேர்ந்தவரும் ஒருவராவார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலியாகும்.

தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.நேற்று மாலையிலிருந்து அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் வெளிநாடு, வெளிமாநில சென்று வராமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க