• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூவத்தூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

February 12, 2017 தண்டோரா குழு

சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் இரண்டாவது நாளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனையடுத்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர்களிடம் உள்ள கேமராக்கள், செல்போன்களை பறித்துக்கொண்டு கொன்றுவிடுவோம் என்றெல்லாம் சசிகலா ஆதரவாளர்கள் மிரட்டி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும், செய்தி சேகரிப்பதை தடுத்து நிறுத்தி அராஜகம் செய்யும் குண்டர்களை வெளியேற்றவேண்டும், காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், என தொடர்ந்து கோஷமிட்டனர்.

பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக ஊர்மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க