• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் ஆட்சியர் ஆய்வு

March 25, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வேடப்பட்டி பேரூராட்சி குரும்பபாளையத்தில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தில் ஆய்வு செய்தார். அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்த பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

மேலும், வேடப்பட்டி பேரூராட்சியில் உள்ள கிராமப்புற சுகாதார மற்றும் பயிற்சி மையத்தில் புறநோயாளிகள் பிரிவு,காய்ச்சல் பிரிவு, தடுப்பூசி செலுத்தும் அறை,நோயாளிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பிரிவுகளை நேரில் பார்வையிட்டு நோயாளிகளின் பதிவேடுகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, பூசாரிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் அனுப்ப அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க