March 27, 2018
தண்டோரா குழு
கூட்டுறவு சங்க நிர்வாகி தேர்தலுக்கான விண்ணப்பித்தை ஆளும்கட்சிக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் வழங்க வேண்டி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(மார்ச் 27)மனு அளித்தார்.
கூட்டுறவு சங்க நிர்வாகி தேர்தலுக்கான விண்ணப்பத்தை அதிமுக வினருக்கு மட்டுமல்லாமல் மற்ற கட்சியினருக்கும்,பொதுமக்களுக்கும் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு கொடுத்தார்.
ஏப்ரல் மாதத்துடன் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கின்றது. மொத்தம் 15 அரசு துறைகளுக்கன 18755 சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்,கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக வினருக்கு மட்டுமே கூட்டுறவு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை தருவதாகவும், மற்ற கட்சியினரோ பொதுமக்களோ விண்ணப்பத்தை கேட்டால் காவல்துறையினரை வைத்தோ, அடியாட்களை வைத்தோ மிரட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,தேர்தல் விண்ணப்ப படிவத்தை அனைவருக்கும் பொதுவானதாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.