• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூடங்குளம் 2வது பிரிவு இரு வாரங்களில் மீண்டும் தொடக்கம்

March 14, 2017 பா.கிருஷ்ணன்

கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் இரண்டாவது உலை இரு வாரங்களில் மீண்டும் மின்உற்பத்தியைத் தொடங்கும். இது ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

அதே அளவு திறனுள்ள முதல் உலை எரிபொருள் நிரப்புவதற்காக வரும் ஏப்ரல் மாத இடையில் உற்பத்திப் பணியைத் தற்காலிகமாக நிறுத்தும் என்று கூடங்குளம் அணுமின் உற்பத்தித் திட்டத்தின் இயக்குநர் எச்.என். சாஹு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் வரும் மே மாதம் இறுதியில் தொடங்கும்.

இரண்டாவது உலை சோதனைப் பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இரு வாரங்களில், அதாவது மார்ச் கடைசிவாரம் அது மீண்டும் இயங்கும்.

இரண்டாவது பிரிவு தேவையின் காரணமாகவே உற்பத்தி நிறுத்தப்பட்டது என்று மின்சக்தி இயக்க கார்ப்பரேஷன் (POSOCO) தெரிவித்தது.

முதல் பிரிவு தனது உற்பத்தித் திறனில் 85 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.ஆண்டுதோறும் அணுமின் உலையில் மூன்றில் ஒரு பங்கு எரிபொருள் பிரிவு மாற்றப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 163 எரிபொருள் பிரிவுகள் உள்ளன. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை 54 எரிபொருள் பிரிவுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

தற்போது முதல் உலையின் இரண்டாவது எரிபொருள் பிரிவு மாற்றப்படுகிறது.மூன்றாவது உலையின் கட்டுமானப் பணிகள் மே மாதம் தொடங்கி, 69 மாதங்களில் நிறைவடையும்.இதனிடையே, தென் மாநிலங்களில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் திறனுள்ள இரு பிரிவுகள், கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்தில் உள்ள தலா 220 மெகாவாட் திறனுள்ள நான்கு பிரிவுகள் போதிய அளவுக்கு மின்சாரம் தடையின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன”.

இவ்வாறு கூடங்குளம் இயக்குநர் எச்.என். சாஹு தெரிவித்தார்.

மேலும் படிக்க