• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூகுளில் வேலைக்காக விண்ணப்பித்த 7 வயது சிறுமி

February 25, 2017 தண்டோரா குழு

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை!

“அவ்வளவு பெரிய நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்குமா?” என்று யோசிப்பவர்களும் உண்டு. ஆனால் சலோய் என்னும் 7 வயது சிறுமி செய்த ஆச்சரியமான செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவள் பெரிய பெரிய சாதனைகளைச் செய்து புகழ் பெறவில்லை. தனது கனவு, வாழ்வின் லட்சியத்தை ஒரு கடிதத்தில் எழுதி, கூகுள் நிறுவனத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்தாள். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையும் அதற்கு அழகான பதில் எழுதியுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 7 வயது சிறுமி சலோய் ஒரு நாள் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவது குறித்து கடிதம் எழுதினாள். அவளுடைய கடிதத்திற்கு கூகுள் தலைவரிடமிருந்து பதில் வந்ததும் மிகுந்த உற்சாகம் அடைந்தாள்.

அவள் எழுதிய கடிதம் இதுதான்:

“என் பெயர் சலோய். எனக்கு 7 வயது. நான் பெரியவளான பிறகு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். மேலும், நான் சாக்லேட் தொழிற்சாலையிலும் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியிலும் பங்கேற்க விரும்புகிறேன். எனக்குக் கணிப்பொறி மற்றும் ரோபோட்ஸ் பிடிக்கும்.

நான் வகுப்பில் நன்றாக படிக்கிறேன் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பது நன்றாக இருக்கிறது என்றும் அனைத்து பாடங்களையும் நன்றாக படிக்கிறேன் என்றும் ஆசிரியர்கள் என் பெற்றோரிடம் கூறினர்.

இந்தக் கடிதத்தை கூகுள் நிறுவனத் தலைவராகிய நீங்கள் படிப்பதற்கு நன்றி. நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது. என்னுடைய முதல் கடிதம் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அனுப்பியது” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாள்.

அச்சிறுமியின் கடிதத்தைப் படித்த கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அவளுக்குப் பதில் எழுதினார். தொழில்நுட்பத்தில் அவளுக்கு இருந்த ஆர்வத்தை மனமாரப் பாராட்டினார். அவளுக்குச் சில அறிவுரைகளையும் அவர் தந்தார்.

“நீ கடினமாக உழைத்து, உன் கனவுகளைப் பின் தொடர்ந்தால், ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டியில் பங்கேற்பது முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவது வரையிலான எல்லாக் கனவுகளை நனவாக்க முடியும். நீ உன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உன் வேலைக்கான விண்ணப்பத்தைக் காண ஆவலோடு இருக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.

சுந்தர் பிச்சையிடம் இருந்து தனது மகளுக்கு கடிதம் வந்ததை குறித்து மகிழ்ச்சி அடைந்தும், மகளின் இந்த உயரிய லட்சியத்தை குறித்து கொண்டாடினார் சலோயின் தந்தை ப்ரிட்ஜ்வாட்டர்.

“வாழ்த்துக்கள் மகளே! அம்மாவும் நானும் பெருமை அடைகிறோம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுயிருந்தார்.

மேலும் படிக்க