• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை தொழிலாளர்கள் குறித்து 1098 இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் – ஆட்சியர்

August 7, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டக்குழு கூட்டம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, காவல் துறை, வருவாய் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் சைல்டு லைன் ஆகியோர் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும்.மேலும் குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது காவல்நிலையத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மற்றும் எம்எஸ்எம்இ திட்டம் மூலம் பயிற்சி அளித்து சுய தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்ட இருப்பது தெரியவந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0422 2305445 என்ற தொலைபேசி எண்ணிலோ காலை 9.30 மணிமுதல் மாலை 7.00 மணி வரை புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசன், ரவிச்சந்திரன், தேசிய குழந்தை தொழிலாளர் மாவட்ட திட்ட அலுவலர் விஜயகுமார் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க