• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை தொழிலாளர்களாக மீட்பு, தற்போது கல்லூரிகளில் படிப்பு 21 பேரை பாராட்டிய ஆட்சியர்

June 20, 2023 தண்டோரா குழு

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று,தற்போது கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ,மாணவியர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் 21 நபர்களை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டிe புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வை எளிதாக்குவதற்கும், தொழிற்பயிற்சியுடன் முறையான கல்வியை அவர்களுக்குt அறிமுகப்படுத்துவதற்கும் உதவும் வகையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 35 சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 383 நிறுவனங்களிலிருந்து 18 வயதிற்குt கீழான 27 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. படித்த படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகளும் உள்ளன. கல்லூரியில் படிப்பை முடித்து படித்த படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பினை பெறுவதற்கும், போட்டித்தேர்வுகள் மூலம் அரசு வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் முயற்சி செய்யவேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கென்று இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியினை பெறலாம். கடினஉழைப்பு, விடாமுயற்சியுடன் படித்தால் நிச்சயமாக தேர்வுகளில் வெற்றிபெற்று அரசு வேலைவாய்ப்பினை பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் திட்ட இயக்குநர் விஜயகுமார் உடனிருந்தார்

மேலும் படிக்க