• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தை தொழிலார்களின் நிலை என்ன? குழந்தை தொழிலார்கள் இல்லாத சமூகம்!.

June 13, 2018

வருங்கால இந்தியாவின் தூண்கள் இன்றைய மாணவர்களும்,இளைஞர்களும் தான்.ஆனால் ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல்,குடும்ப சூழ்நிலை காரணமாக ஓட்டல்களிலும், ஒர்க்சாப்புகளிலும்,சாலையோர கடைகளிலும் வேலை செய்வதை பார்த்தால் நமக்கே கஷ்டமாக இருக்கிறது.

அந்த இளம்பிஞ்சுகளின் மனதிலும் சமுதாயத்தில் படித்து முன்னேற வேண்டும்,மற்ற குழந்தைகளை போல சிறகடித்து பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா??.வீட்டு சூழ்நிலை காரணமாக வறுமையால் சரியான கல்வியறிவு பெறாமல் சிறுவயலிருந்து குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் இவர்களால் கடைசி வரை சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைலை அடைய முடியாமலே போய்விடுகிறது.

இப்படிப்பட்ட குழந்தை தொழிலர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூன்12ம்,தேதி “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு”தினம் கொண்டாடி வருகிறோம்.குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதின் அவசியத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து கோவையில் குழந்தைகள் ஒழிப்பு துறை திட்ட அலுவலர் விஜயகுமார் கூறுகையில்,

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.இந்தியா முழுவதும் 267 குழந்தை ஒழிப்பு மையங்களும்,தமிழ்நாட்டில் 14 மையங்களும் இருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் கட்டாயத்தின் பேரில் வேலைக்கு செல்கின்றனர்.இதனால் இவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் பாதிப்படைகின்றனர்.இது வரை பல குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு,தங்கள் சிறப்பு பள்ளிகளில் படித்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் அஸ்ஸாம்,ஜார்கண்ட்,ஒரிசா போன்ற 10 வெளி மாநிலத்திலிருந்தும் பல குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே தங்களிள் குறிக்கோள்.

அவர்களுக்கு பஸ்பாஸ்,உதவித்தொகை,மதிய உணவு போன்ற பல சிறப்பு வசதிகள் உள்ளன. அவர்களின் திறமையை கண்டறிந்து,அவர்களுக்கு ஒரு சரியான களத்தை அமைத்து தருவதே தங்களின் நோக்கம்.அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் அரசாங்கம் அளித்து வருகிறது.

முதலாளிகள் சில குழந்தை தொழிலர்களை தங்களின் சுயநலத்திக்காக குறைந்த சம்பளம் கொடுத்து அடிமைகளாக பயன்படுத்தி கொள்கின்றனர்.ஆனால் அன்றைய காலத்தில் திரும்பும் திசையெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் வண்ணமாக இருந்தது.ஆனால் இப்போது குழந்தை தொழிலர்கள் 90% குறைந்துள்ளனர்.பெரும்பாலான குழந்தைகளுக்கு போதிய உணவு,உடை மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர்.குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட பல குழந்தைகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து 7 வயதில் குழந்தை தொழிலாளராக மீட்கப்பட்ட தரணிதரன்(17) கூறுகையில்,

நான்,வீட்டு சூழ்நிலை காரணமாக தாத்தா மற்றும் பாட்டி ஆல் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சேர்க்க பட்டேன்.அங்கு பனியன் துணிகளை மடிப்பது,சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வந்தேன்.தினமும் 8மணி நேரம் வேலை செய்வேன் ஆனால் மாத வருமானம் 3000 ஆகும்.3முதல் 4 மாதம் வரை வேலை செய்தேன்.அந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு துறையால் மீட்கப்பட்டேன்.எனது கல்வியை தொடர அவர்கள் உதவி செய்தார்கள்.அதனால் தான் இப்போது பனிரெண்டாம் வகுப்பில் 1093 மதிப்பெண் பெற்றுள்ளேன்.நீட் தேர்விலும் 174 மதிப்பெண் வாங்கியுள்ளேன்.இன்னும் அரசாங்கம் குழந்தை தொழிலாளிர்களின் நலன் காக்க உதவ வேண்டும்.

இதை போன்ற எத்தனையோ திறமையான குழந்தைகளின் கடமைகளும்,திறமைகளும் பறிக்கப்பட்டு இன்னும் பல ஓட்டல்களிலும்,சுரங்கங்களிலும்,பட்டாசு ஆலைகளிலும் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.இவையெல்லாம் சமுதாயத்தில் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விதமான தீண்டாமை தான்.வறுமை இல்லாத நிலை இருந்தால் இது போன்ற குற்றங்கள் குறையும்.

மேலும் படிக்க