• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து மனநோயாளி அடித்துக் கொலை

May 11, 2018 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சந்தேகம்படும்படி யார் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மனநோயாளி ஒருவர் கையில் அழுக்குத் துணி மூட்டையுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.அவரை அப்பகுதிமக்கள் குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மனநோயாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ன்னர் அவர் சடலத்தை பொதுமக்கள் உப்பு நீர் ஏரியில் உள்ள மேம்பாலத்தில் கயிற்றை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். ன்னர் விசாரணையில் அவர் ஒரு மனநோயாளி எனவும் வெகு நாட்களாக திருவள்ளூர் பகுதியில் சுற்றி திரிந்ததும் அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க