• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தையின் உயிரை காப்பாற்ற, 516 கிலோமீட்டர் தூரத்தை 7மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

November 17, 2017 தண்டோரா குழு

கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற, சுமார் 516 கிலோமீட்டர் தூரத்தை 7மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் தாமீம். அவர் அங்குள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் பாத்திமா லபியா என்னும் ஒரு மாத பெண் குழந்தைக்கு, கடந்த ஒரு வார காலமாக மூச்சுதிணறல் ஏற்பட்டது. அந்த குழந்தைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் அதை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மருத்துவர்கள் அதன் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அந்த குழந்தையை விமானம் மூலம் கொண்டுசெல்ல வேண்டுமானால் கோழிக்கோடு அல்லது மங்களூர் விமானநிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் சாலை மூலம் அங்கு செல்ல சுமார் 5 மணிநேரம் ஆகும். இதனால் குழந்தையை திருவனந்தபுரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அந்த பொறுப்பை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமீமிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இது குறித்து கண்ணூர் போலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கண்ணூரில் இருந்து புறப்பட்டது.

ஆம்புலன்ஸ் பயணம் செய்யும் பாதையில் உள்ள அனைத்து மாவட்டங்களின் போக்குவரத்து காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. டிரைவர் தாமீம் சிறிதும் தாமதிக்கவில்லை. மணிக்கு 100-120 கிலோமீட்டர் வேகத்தில் ஆம்புலன்சை ஓட்டி, 7 மணி நேரத்தில், அதிகாலை 3.22மணியளவில் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா மருத்துவமனையை அடைந்தார்.

ஸ்ரீ சித்ரா மருத்துவமனையில் குழந்தை பாத்திமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்சை வேகமாக ஓட்டி சென்று குழந்தைடைய காப்பாற்றிய டிரைவர் தமீமிற்குபலரும் தங்கள் மனமார்ந்த பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க