• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 9, 2018 தண்டோரா குழு

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட சமூக நல பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உளவியல் மற்றும் உடல் ரீதியாகவும் மற்றும் பாலியல் வன்கொடுமையாலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குடும்ப கெளரவம்,அறியாமை காரணமாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை.இதனால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களுக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.இச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம்,தங்களை தாங்களே பாதுகாப்பது,குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து நாடகம்,பாட்டு,இசை நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றனர்.

மேலும் படிக்க