• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி

August 3, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் முழுவதும் இன்று குழைந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வடகோவையில் மாநகர காவல்துறை துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி வடகோவை சிந்தாமணியில் தொடங்கி டவுன்ஹால் ரோடு வழியாக சென்று ஆர்எஸ்புரம் வழியாக வடகோவையை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு அடங்கிய பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாலி உள்ளிட்ட பதகைகளை கையில் ஏந்தியாவாறும், விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியாவாறும் சென்றனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகள்,காவல்துறையினர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் நல அலகு துறை அதிகாரிகள், குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் சத்துணவுத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அதிகாரிகள், காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க