உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் துவக்கி வைத்து, குழந்தைகளுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.அந்த நாளில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தனியார் பள்ளி மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் வ உ சி மைதானத்திலிருந்து – ஹோப் காலேஜ், ஃபன் மால் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் சைக்கிள் பேரணியாக சென்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுடன் தானும் சைக்கிள் ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுமார் 6 கிலோ மீட்டர் சைக்கிளில் குழந்தைகள் பேரணி செல்வதால் வழிநெடுக ஆங்காங்கா தன்னார்வலர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்