• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்க முயற்சிக்கும் புலவர்கள்.

March 1, 2016 Venki Satheesh

யாரும் மறக்கமுடியாத திரைப்படமான திருவிளையாடலில் தருமியிடம் பாடலைக் கொடுத்தனுப்புவார். அப்போது சபையில் இருக்கும் நக்கீரர் பாடலில் தவறைக் கண்டுபிடித்து பரிசு கொடுக்க வேண்டாம் எனக் கூறுவார். அப்போது தருமி ஒரு வசனம் பேசுவார் பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் இதில் நீர் எந்தவகையைச் சேர்ந்தவர் என உங்களுக்கே தெரியும் எனக் கூறுவார்.

அதேபோல தற்போது பலர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்க முயற்சி செய்கின்றனர். ஆனால் நக்கீரர் போல் தனக்குத் தெரிந்த பகுதியில் மட்டும் விமர்ச்சனம் செய்யாமல் தெரியாத பல விசயங்களில் மூக்கை நுழைத்து மூக்கறுபடும் நிகழ்வும் நடைபெறுகிறது.

குறிப்பாக தற்போது சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என வந்த பிறகு தான் சார்ந்த ஒரு குழுவில் தனக்கு அதி மேதாவி எனப் பெயர் வேண்டும் என நினைத்து பத்திரிகை துறையை விமர்ச்சனம் செய்வது பிரபலமாகி வருகிறது.

அந்த காலத்தில் வேலை வெட்டிக்குப் போகாமல் சாவடியில் உள்ள டீ கடையில் உர்கார்ந்து கொண்டு ஊர்க் கதையை பேசி பொழுது போக்கும் கும்பல் போன்ற இவர்கள் அடிக்கடி மூக்கறுபடுவதும் நடைபெறுகிறது.

சாவடியில் அமர்பவர்கள் தான் உள்ளூர் குடுமிபிடி சண்டை முதல் உலக சண்டை வரை அலசி ஆராய்வார்கள். இதைப் பார்த்தால் அனைத்தும் இவர்கள் சொல்லி வைத்தது போலவே நடக்கிறது என நினைக்கத் தோன்றும். அதே போலத்தான் தற்போது ஒரு சிலர் தனக்கு தெரியாத ஒரு துறை குறித்து விமர்ச்சனம் செய்வது.

குறிப்பாக ஏதாவது ஒரு செய்தியை போட்டு இதையெல்லாம் உங்கள் செய்திகள் வெளியிடாது எனக் கூறுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அந்தச் செய்தியை செய்தி நிறுவனத்தில் உள்ள ஒருவர் தனது அனுபவப்பார்வையால் வேறுமாதிரி கொடுத்திருப்பார்.

ஆனால் அந்தச் சாவடி தின்னையாளர்கள் தாங்கள் நினைத்தது போல் போடவில்லை எனக் குறை கூறுவர். அவர்கள் நினைத்தது போல் செய்தி வெளியிட நிறுவனத்தில் உள்ளவர்கள் ஒன்றும் கத்துக்குட்டிகள் இல்லை. மேலும் ஒரு செய்தி இருந்தால் அது அடுத்தநாள் சுமார் 200 செய்தித்தாள்களில் வரும் அதில் எத்தனைச் செய்தித்தாள்கள் அவர் படித்திருப்பார் எனத் தெரியாது. மேலும் அடுத்தநாள் அவர் ஊரில் இருந்திருப்பாரா என்றே தெரியாது.

இந்த நிலையில் அதைப் போடவில்லை இதைப் போடவில்லை எனக் குற்றம் கூறுவது மட்டும் சரியாக செய்வார். தற்போது அனைத்து ஊடகங்களுக்கும் ஆன்லைன் பதிவுகள் உள்ளன அதில் பார்த்தாலே தெரியும் ஆனால் அதைச் செய்யாமல் குறை கூறுவார்கள்.

இவர்கள் எல்லாம் நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொண்டு பதிவு போடும்போதே இப்படி யோசித்தால் பல கோடி ரூபாய் முதலீடு போட்டு பலரை வேலைக்கு அமர்த்தி வேலை வாங்கும் நிறுவனம் எப்படி யோசிக்கும் எனவே இது போன்ற நக்கீரர் வேலை செய்ய முற்படுபவர்கள் தயவு செய்து அனைத்தையும் தெரிந்து விமர்சிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

மேலும் படிக்க