• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறை தீர்ப்பு கூட்டத்தில் சொர்ப்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்து கொள்கிறார்கள் – விவசாயிகள் வேதனை

January 31, 2019 தண்டோரா குழு

கோவையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சொர்ப்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்துகொல்வதால் தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக விவாதிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர்.

இதில் உயர்மின் கோபுரங்களை அமைப்பதற்கு விவசாயிகளை வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் மிரட்டி உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை அதனை நிறுத்த கோரியும், மற்றும் உயர் மின் இணைப்புகளை தரை வழியாக கொண்டு செல்லவேண்டும், நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீட்டுமனை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் கருவிகள் பெற அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

மேலும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி கூறுகையில்,

மாவட்ட ஆட்சியர் விடுமுறையில் உள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், உயர்மின் கோபுரம் அமைக்க 48மணிநேரம் தாசில்தார் கால அவகாசம் கொடுத்து அதற்க்குள் விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காவல்துறையினர் மூலம் கைது செய்துவிட்டு கோபுரம் அமைக்கும் பணியை தொடருவோம் என அதிகாரிகள் மிரட்டுவதை கண்டித்தும், விவசாயிகள் வாழ்வாதரத்தை பாதிக்கும் இந்த மின் கோபுர திட்டத்தை கை விட்டு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கோரிக்கை மனுவாக அளித்ததாகவும்,அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளை மிரட்டுவதை நிருத்திக்கொள்ளவேண்டும் என்பதை ஆட்சபனையாக தெரிவித்துள்ளதாகவும், மீறி அதிகாரிகள் நடந்து கொண்டால் பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசும் அதிகாரிகளும் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 32துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் ஆனால் மிக சொர்ப்பமான அதிகாரிகள் கலந்து கொள்வதால் விவசாயிகளின் பிரச்சனைகளையும், குறைகளையும் அதிகாரிகளிடம் விவாதிக்க இயலாத நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது பிரச்சனைக்குரிய துறை அதிகாரிகள் கலந்துகொள்வதில்லை என குற்றம் சாட்டிய தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலையை மாவட்ட நிர்வாகம் மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க