• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஈ-இன்வாய்ஸிங் முறையைப் பின்பற்றுவதற்கு உதவும் டேலி சொலுஷன்ஸ்

September 28, 2022 தண்டோரா குழு

10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட வணிகங்களுக்கு ஈ -இன்வாய்சிங் முறைக்கு மாற்றியமைக்க காலக்கெடு நெருங்கி வருவதால், இந்த வணிகங்களைத் தடையின்றி மாற்றுவதற்கும், அதன் முழுமையான இணைக்கப்பட்ட தீர்வான TallyPrime உடன் ஈ -இன்வாய்சிங் ஐ நிர்வகிப்பதற்கும் டேலி சொல்யூஷன்ஸ் உதவ தயாராக இருக்கிறது.

இந்த நிறுவனம் உள்ளூர் வர்த்தக சங்கங்களுடன் பல நிகழ்வுகளை நடத்துகிறது.மேலும், ஈ-இன்வாய்சிங் செயல்படுத்தல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க எக்ஸ்போக்களில் பங்கேற்கிறது. கூடுதலாக, இது பல உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் பணிபுரிகிறது மற்றும் அதிகபட்ச வணிக உரிமையாளர்களை சென்றடைய பொருள் வல்லுனர்களுடன் வலைத்தள கருத்தரங்குகளை வழங்குகிறது.

எளிதாக வாட்ஸ்அப் ஆதரவுடன், அதன் வாடிக்கையாளர் ஆதரவு குழுவான TallyCare உட்பட அனைத்து டச் பாயின்ட்கள் மூலமாக சரியான தகவல்கள் பகிரப்படுவதை உறுதிசெய்ய, இந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கும் 28,000க்கும் மேற்பட்ட கூட்டாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இந்த முன்முயற்சி குறித்து, டேலி சொலுஷன்ஸ் இன் தென் மண்டல பொது மேலாளர் புவன்ரஞ்சன் கூறுகையில்,

“10 கோடி விற்றுமுதல் கொண்ட வணிகங்களை உள்ளடக்கும் மற்றும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்திய அரசின் நடவடிக்கை, வணிகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் அடுத்த கட்டமாக உள்ளது. 5 வது கட்ட ஈ – இன்வாய்ஸிங் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 4.8 லட்சத்திற்கும் அதிகமான வணிகங்கள், ஈ – இன்வாய்ஸிங் வரம்பிற்குள் வரும், அதில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான வணிகங்கள், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கடைபிடிக்கத் தொடங்கும். இது அவர்களின் வேலை செய்யும் விதத்தை எவ்வாறு வலுவாக்கும் என்பதையும், தொழில்நுட்பம் எவ்வாறு எளிதாக இணக்கமாக இருக்க அவர்களுக்கு உதவுகிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது.

கோயம்புத்தூர் எங்கள் முக்கிய முன்னுரிமை சந்தைகளில் ஒன்றாகும், மேலும் இந்த ஆணையை கடைபிடிக்க வேண்டிய இந்த பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு உதவுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். சாத்தியமான அனைத்து தொடர்பு புள்ளிகளிலும் வாடிக்கையாளர்களை அடையும் இந்த பிரச்சாரம், டேலியின் முதன்மையான மென்பொருளான TallyPrime ஐப் பயன்படுத்தி, ஒரே கிளிக்கில் மின்-விலைப்பட்டியல்களை உருவாக்க, தொழில்நுட்பம் அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் காண்பிக்கும்.” என்று கூறினார்.

வணிக மேலாண்மை தீர்வு மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகள் பற்றிய ஆழமான புரிதலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிபுணத்துவத்துடன், டேலி, 2 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்களுக்கு, அவர்களின் கணக்கியல், இருப்பு கணக்கு மற்றும் இணக்கத் தேவைகளுக்கு பல ஆண்டுகளாக உதவியுள்ளது.

மேலும் படிக்க