• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

May 2, 2022 தண்டோரா குழு

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கி பாராட்டினார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் ‘‘தீராக் காதல் திருக்குறள்” என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென ‘‘குறளோவியம்\” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் பரிசுகள் வழங்கப்பட்டன.இதன் ஒரு பகுதியாக குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்க பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும், 20 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1000 சிறப்பு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் சமீரன் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க