January 29, 2018
தண்டோரா குழு
பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. இந்நிலையில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 9,351 காலிப் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியானது.
இதற்கான கடைசி நாள் கடந்த 13ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பு காரணமாக விண்ணபிப்பதற்கான கடைசி நாள் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 20.83 லட்சம் பேரில், 11.34 லட்சம் பேர் பெண்களும், 9.48 லட்சம் ஆண்களும், 54 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் இத்தேர்வுக்கு தான் பெறப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பித்த அனைவரும் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.